Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
07
Feb
குத்து பாடலுக்கு ‘ஏ’ சர்டிபிகேட் : திரையுலகினர் கடும் எதிர்ப்பு


சென்னை: குத்து பாடல் இடம்பெறும் படத்துக்கு ‘ஏ சான்றிதழ் தருவதற்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிப் படங்களிலும் தற்போது குத்து பாடல் (ஐட்டம் சாங்)பிரபலமாக உள்ளது. முன்னணி கதாநாயகிகள் விரும்பி இதில் நடிக்கின்றனர். ஒரு பாடலுக்கு மட்டுமே கவர்ச்சியாக ஆட வேண்டும் என்றாலும் அவர்களுக்கு அதிகமான சம்பளம் தரப்படுகிறது. இந்நிலையில் குத்து பாடல் இடம்பெற்றால் இனி அப்படத்துக்கு ‘ஏ (18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்க வேண்டிய படம்) சான்றிதழ் வழங்கப்படும் என தணிக்கை குழு அறிவித்துள்ளது. இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ‘தமிழ்படம் இயக்கிய சி.எஸ்.அமுதன் கூறும்போது, ‘தணிக்கை குழுவின் தெளிவற்ற ஒரு முடிவாகவே இது தெரிகிறது. சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்ற வாள மீனுக்கும் பாடல் குத்துப்பாடல்தான். அதில் ஆபாசம் எதுவுமில்லை.

எந்த காட்சிகள் இடம்பெற்றால் ‘ஏ’ சான்றி தழ் தரப்பட வேண்டும் என்ற விதிமுறை ஏற்கனவே தணிக்கை விதிகளில் கூறப்பட்டிருக்கிறது என்றார். பாலிவுட் நடிகை ஜரீனா கான் கூறும்போது, ‘சில காட்சிகள் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைப்பதற்காக  எடுக்கப்படுகின்றன. ஆனால் சில பாடல்கள் கதையோடு ஒட்டிவருகின்றன. அது திரைக்கதையின் ஒரு அங்கம். நான் பல படங்களில் ஆடி இருக்கிறேன். இதுபோன்ற பாடல்கள் தேவையில்லாமல் இடம்பெற்றால் அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கலாம். கதைக்கு தேவைப்படும் பட்சத்தில் அதை ‘ஏ‘ சான்றுக்கு உட்படுத்தக்கூடாது என்றார். சிறுத்தை இயக்குனர் சிவா கூறும்போது, ‘என் படத்தை குடும்பத்தினர் அனைவரும் பார்க்க வேண்டும் என்று எண்ணியே இயக்குகிறேன். படத்தின் கதாநாயகி பாடலுக்கு நடனம் ஆடுகிறார் என்றால் அதை ஆபாச பாடல் லிஸ்ட் டில் சேர்க்கக்கூடாது. குத்து பாட்டு எது என்பதற்கான சரியான விளக்கத்தை தணிக்கை குழு தர வேண்டும் என்றார்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Youtube Dinakaran Live Channel