ஒரே மொழியில் அடைபட்டு கிடக்க மாட்டேன் : விமலா ராமன்
சென்னை: ‘ஒரே மொழியில் அடைபட்டு கிடக்கமாட்டேன்’ என்றார் விமலா ராமன். தமிழ்நாட்டை சேர்ந்த விமலா ராமனின் பெற்றோர் 20 வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தனர். அங்கேயே பிறந்து வளர்ந்தார் விமலா ராமன். கே.பாலசந்தர் இயக்கிய ‘பொய்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து ‘ராமன் தேடிய சீதை’ என ஒரு சில தமிழ் படங்கள் மற்றும் தெலுங்கு, மலையாள படங்களில் நடித்தார்.
தற்போது இந்தியில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: இந்தியில் அன்குஷ் பட் இயக்கும் ‘மும்பை மிரர்’ படத்தில் நடிக்கிறேன். சச்சின் ஜோஷி ஹீரோ. இந்தி படங்கள் உலக அளவில் அறிமுகமாவதற்கான வாய்ப்பை தருகிறது. சிறந்த நடிகை என்று பெயர் பெற ஆசை. ஒரே மொழியில் அடைபட்டு கிடக்கும் எண்ணம் எனக்கில்லை. இந்தியில் கோவிந்தாவுடன் நடித்துள்ள படமும் உருவாகிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு விமலா ராமன் கூறினார்.