Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
31
Jan
மிகச் சிறந்த கலைஞனை புண்படுத்துவது திரையுலகுக்கே இருண்ட தருணம் : நாடு முழுவதும் கமலுக்கு ஆதரவு பெருகுகிறது

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை: ‘விஸ்வரூபம்’ பட பிரச்னையில் கமல்ஹாசனுக்கு அகில இந்திய அளவில் ஆதரவு பெருகி வருகிறது. படத்துக்கு தடை விதித்தது எந்தவிதத்திலும் சரியல்ல என்று பல தரப்பினரும் குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். கமல் இயக்கி, நடித்துள்ள படம் ‘விஸ்வரூபம்’. இப்படத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. அதை எதிர்த்து ஐகோர்ட்டில் கமல் தொடர்ந்த வழக்கில் நீதிபதி கே.வெங்கட்ராமன் தடையை நீக்கி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக அப்பீல் செய்தது. தலைமை நீதிபதி (பொறுப்பு) எலிப்பி தர்மராவ், நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரித்து, நீதிபதி வெங்கட்ராமன் உத்தரவுக்கு தடை விதித்ததுடன். 4-ம் தேதி அரசு பதில் மனு தாக்கல் செய்யவும், 6-ம் தேதி தனி நீதிபதி முன்பு மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதுவரை படத்துக்கு தமிழக அரசு விதித்த தடை நீடிக்கும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

இதற்கிடையே, நேற்று முன்தினம் அரசு விதித்த தடையை நீக்க நீதிபதி வெங்கட்ராமன் தீர்ப்பளித்ததை தொடர்ந்து நேற்று காலை சில இடங்களில் விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டது. ஆனால், போலீசார் படத்தை பாதியில் நிறுத்தி ரசிகர்களை தியேட்டரில் இருந்து வெளியேற்றினர். இதனால் போலீசாருக்கும் ரசிகர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. ஈரோடு, கோவை உள்ளிட்ட இடங்களில் ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், கமலுக்கு நாடு முழுவதும் இருந்து ஆதரவு பெருகி வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறும்போது, ‘‘கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்த குடிமக்கள் எல்லோருக்கும் உரிமை உள்ளது. எல்லோருக்கும் சமமான உரிமையை அரசியலமைப்பு வழங்கி உள்ளது. கலைஞர்களுக்கும் அந்த சுதந்திரமும், உரிமையும் உள்ளது. ‘விஸ்வரூபம்’ படம் தொடர்பாக சில மாநிலங்களில் சர்ச்சை எழுந்துள்ளதாக தெரிகிறது. அந்த விவரம் குறித்து மத்திய அரசு விசாரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்’’ என்றார்.

மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் மணிஷ் திவாரியிடம் கமல்ஹாசன் சார்பில் சில நடிகர்கள், தயாரிப்பாளர்கள் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. ‘விஸ்வரூபம்’ பட பிரச்னை தொடங்கியபோதே முதல் ஆளாக கமலுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் நடிகர் ரஜினிகாந்த். கமலுடன் பேச்சுவார்த்தை நடத்தி முஸ்லிம் சகோதரர்கள் சுமுக முடிவு காண வேண்டும் என்று கூறியிருந்தார். நேற்று மாலை தொலைபேசியில் கமலை தொடர்பு கொண்ட ரஜினி, அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தார். தற்போது கோலிவுட் முதல் பாலிவுட் வரை கமலுக்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

நடிகர் அர்ஜூன்: சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவுக்கே திருப்பி தந்தவர் கமல். நாட்டின் ஒற்றுமைக்காக தன் சொத்துக்களை இழக்க தயார் என்கிறார். அவரது துணிச்சலும், தியாகமும், யாருக்கும் வராது. அவருக்கு இப்படியொரு நிலைமை என்கிற போது கண்ணீர் வருகிறது.

இயக்குனர் விக்ரமன்:
கமலுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை வேதனை அளிக்கிறது. கமல் ஒரு ஒப்பற்ற கலைஞன். மதசார்பற்ற கலைஞன். யாருடைய மனதும் புண்படக்கூடாது என்கிற எண்ணம் கொண்டவர். அவரை புண்படுத்தி பார்க்க வேண்டாம்.

டைரக்டர் வசந்த்: தமிழ் சினிமாவை உலக தரத்துக்கு கொண்டு செல்லும் ஒரு மகா கலைஞனை காயப்படுத்த வேண்டாம். மற்ற மாநிலங்களில் விஸ்வரூபம் திரையிடப்பட்டுள்ளது. அங்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

நடிகர் ஷாருக்கான்:
விஸ்வரூபம் படத்துக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை நாங்களும் சந்தித்தோம். தணிக்கை வாரியம் சான்றிதழ் அளித்துவிட்டால் குறிப்பிட்ட படம் நாடு முழுவதும் மக்கள் பார்ப்பதற்கு ஏற்றது என்றுதான் அர்த்தம். கமல்ஹாசன் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அவருக்கு என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு.

பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ்பட்: கமல்ஹாசன், இந்திய நாட்டின் பொக்கிஷம். அவர் துன்புறுத்தப்படுவது ஒட்டுமொத்த திரையுலகுக்கும் இருண்ட தருணம்.

பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய்:
எந்தவொரு படத்தையும் சுமுகமாக திரையிடுவதற்கு தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் உறுதி அளிக்கிறது. விஸ்வரூபம் படத்துக்கு அத்தகைய சான்றிதழ் கிடைத்த பிறகும் தமிழகத்தில் அச்சத்தை தரும் சூழ்நிலை காணப்படுகிறது.

நடிகர் நாகார்ஜுனா: கமலின் தீவிர ரசிகன் நான். இந்தியா உருவாக்கிய மிகச் சிறந்த நடிகர்களில் அவரும் ஒருவர். அவர் ஒருபோதும் சமுக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் செயல்படுவார் என்று நான் நினைக்கவில்லை.

நடிகை ஜெயப்பிரதா: விஸ்வரூபம் படம் தொடர்பான அரசியல் தேவையற்றது, அர்த்தமற்றது. கமல் தேவையின்றி துன்புறுத்தப்படுகிறார். அவரது நிலையில் இருந்தால் நானும் நாட்டைவிட்டு வெளியேறுவதாக கூறி இருப்பேன். அவரது படத்தில் எப்போதுமே மெசேஜ் அதிகம் இருக்கும். நடிகை குஷ்பு, சினேகா, பாலிவுட் நடிகை சப்னா ஆஷ்மி, இயக்குனர்கள் ஷியாம் பெனகல் உள்ளிட்ட ஏராளமான கலைஞர்கள் கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நடிகர், நடிகைகள் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் கமலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகளை தெரிவிக்க
jayaraj - karaikal
1/31/2013 -- 15:9:17

கமல் சொன்னது போலே நம் முஸ்லிம் சகொதர்ருகள் விஸ்வரூபம் படம் வெளியவர்ற முழு உதல்லிபு தருவார்கள் என்று நம்புகிறேன் எத்தன முள்ளும் என் நட்டு மக்கள் அனைவரும் உன்றகத்தான் இர்ருகிர்றோம் என்று உள்ளகக மக்கல்லு எடுத்து கொட்டுவோம் jaihind

sivakannan - riyath
1/31/2013 -- 15:14:19

கமல் கிரேட் அக்டோர் தமிழ் நாடு கோவேர்ந்த்மென்ட் டோன்ட் இன்கோரே ஹிம். ஹி இச் ஔர் பச்சியன்.

mani - chennai
1/31/2013 -- 15:31:21

ஆதரவு அளித்த எல்லோரூக்கும் நன்றி

Rajkumar - Salem
1/31/2013 -- 16:22:46

இது ஒரு அரசியல் விளையாட்டு போகப்போக தெரியும் கமல் சாருகு எனது வாழ்த்துக்கள்.

madhar - QatarDoha
1/31/2013 -- 16:49:15

கமல் யாருடைய மனதும் புண்படக்கூடாது மாட்டார் என்று சொல்கிறார்களே, ஆனால் படம் முழுவதும் இஸ்லாமியர்களாகிய எங்களின் மார்கத்தை தீவிரவாத மதமாக காட்டி எங்களின் மனதை புண்படுத்தி இருக்கிறாரே அதை யாரும் கண்டிக்க மாட்டீர்களா? கருத்து சுதந்திரம் என்ற பெயரில் யார் வேண்டுமாலும் யாரையும் எதையும் பேசலாமா? லிவிங் டோகேதேர் என்ற முறையில் திருமணம் செய்யாமல் தமிழ் பண்பாட்டிற்கு எதிராக விபச்சாரம் செய்து கொண்டிருக்கும் ஒரு நடிகனுக்காக எல்லோரும் வரிந்து கட்டிக்கொண்டு கோதாவில் இறங்குவது நமது ஜனநாயகத்திற்கும் பாரம்பரியத்திற்கும் எதிரானது.

karthik - pondicherry
1/31/2013 -- 17:11:52

டியர் சார், சரியான முடிவு உங்களால் எடுக்கபடுகிறது -உங்கள் அனுபவங்கள் பேசுகிறது / வருத்தமும் கோபமும் தீர ஆண்டவனை வேண்டுகிறேன்.

selvamani - dubai
2/1/2025 -- 1:47:35

வன்முறை அரசியலிலும் இருக்கிறது. தமிழ்நாட்டில் தடை செய்தால் அரசியலே இருக்காது . வாழ்க கமல் ! வளர்க உம் தொண்டு ! வளர்க உம் புகழ் .

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran