வேடசந்தூர்: திண்டுக¢கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தேவிநாயக¢கன்பட்டியில் தை பவுர்ணமி பெண் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்தாண்டு விழாவையொட்டி இக¢கிராமத்தில் உள்ள பருவமடையாத சிறுமிகள் நிலவுக்கு கடந்த 21ம் தேதி பால் படைத்தனர். மறுநாளில் இருந்து தினமும் மாலை தங்களது வீடுகளில் வித விதமான சாதங்களை மாசடச்சியம்மன் கோயிலுக¢கு கொண்டு வந்தனர். பிற சிறுமிகளின் சாதத்துடன் சேர்த்து ஒரு பகுதியை நிலாவுக்கு படைத்து அச்சாதத்தில் விளக¢கேற்றிய பின் கலக¢கிய சாதத்தை அனைவரும் பகிர்ந்து சாப்பிடும் நிகழ்ச்சி 7 நாள் நடந்தது. நேற்று இரவு 10 மணியளவில் நிலா சிறுமியாக பிரியதர்ஷினியை(11) ஊர் மக¢கள் தேர்வு செய்தனர். சிறுமியை கிராம பெண்கள் ஊர் எல்லையில் உள்ள சரளிமலைக¢கு அழைத்து சென்றனர்.
அங்கு அமர வைத்து சிறுமியின் தலை, கழுத்து, கைகளில் இலை நீக்கிய ஆவாரம் பூ மாலையை அணிவித்தனர். தலையில் பூ கூடை சுமந்து அச்சிறுமி பெண்களுடன் ஊர்வலமாக தேவிநாயக¢கன்பட்டி வந்தார். மாசடச்சியம்மன் கோயிலில் சிறுமிக்கு பச்சை மட்டையால் அவரது முறைப்பையன்கள் குடிசை அமைத்தனர். குடிசையில் இருந்த சிறுமியை வெளியேற்றி மாவிளக¢கிட்டு அதன் நடுவே அமரவைத்து பெண்கள் கும்மி பாடல்கள் பாடினர். இன்று அதிகாலை நிலா மறையத்துவங்கியதும், அச்சிறுமியை மக்கள் அழைத்துக¢கொண்டு பூக்கூடையை ஊர் கிணற்றில் கவிழ்த்தனர். இதிலிருந்த பூக்கள் நீரில் மிதந்ததும் அதன் மீது மண் கலயத்தில் திரி விளக¢கு ஏற்றி ஊர் திரும்பினர். கிணற்றில் ஏற்றிய இவ்விளக¢கு 7 நாள் அணையாமல் எரியும் என கூறப்படுகிறது. 5 தலைமுறையாக 100 ஆண்டுகளுக¢கு மேலாக இத்திருவிழாவை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.