கிளாமருக்கு மாறிய ஹீரோயின் ஹீரோ பட டைட்டில் முடிவு
நல்லகாலம் பொறக்குது... நல்லகாலம் பொறக்குது...
வாக சூட்ற இனிய நடிகை இழுத்துபோத்தி நடிச்சிப் பாத்தாராம்... பாத்தாராம்... அதுக்கு பலனா விருதும் கெடக்கலயாம். படமும் கெடக்கலயாம். விசனத்துல இருந்த நடிகை மல்லுவுட்லயிருந்து வந்த கிளாமரான ரோல்ல நடிக்க சம்மதிச்சிட்டாராம். நடிகயோட கிளாமர் முடிவ கேட்டதும் இயக்கங்க தங்களோட படத்துக்கு அவர எப்படி கிளாமரா யூஸ் பண்ணலாம்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். சீக்கிரமே கிளாமர் ஹீரோயின்கள் பட்டியல்ல நானும் இடம்பிடிச்சிருவேன்னு நடிகை சொல்றாராம்... சொல்றாராம்...
பிரகாச இசைக்குள்ள பல ரூபம் ஒளிஞ்சிட்டிருக்காம்... இருக்காம்... அடுத்து நடிக்கறதுல தீவிர கவனம் செலுத்த தொடங்கிட்டாராம். அப்படியே படம் தயாரிக்கற முடிவும் எடுத்திருக்காராம். இதுக்கான ஏற்பாடும் பண்ணி இயக்கம், நடிகர் எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டாராம். சீக்கிரமே தயாரிப்பு துறைல கால வெக்கப்போறதால இசை அமைக்கற படங்கள குறைச்சிட்டாராம்... குறைச்சிட்டாராம்...
பஞ்ச் ஹீரோ படத்துக்கு டைட்டில் முடிவு பண்ணதயடுத்து தல ஹீரோ படத்துக்கும் டைட்டில தேர்வு பண்ணிட்டாங்களாம்... பண்ணிட்டாங்களாம்... சூப்பர் நடிகரோட டைட்டில முதல்ல தேர்வு பண்ணி பிறகு புதுடைட்டிலுக்கு பஞ்ச் ஹீரோ மாறுனாராம். அது மாதிரி தல நடிகர் படத்துக்கு நடிகர் திலகம் நடிச்ச ‘ரெட் மண்’ ன்ற பழைய டைட்டில பரிசீலிச்சி பிறகு கைவிட்டாங்களாம். இதயடுத்து ‘வலை’னு டைட்டில் செலக்ட் பண்ணிருக்காங்களாம். அத இயக்கம் தரப்பு இன்னும் உறுதி பண்ணலையாம்... இல்லையாம்...