சுடுகாட்டில் ரொமான்ஸ் செய்த ஹீரோ
சுடுகாட்டில் ரொமான்ஸ் செய்தபோது நடுங்கிவிட்டேன் என்றார் சத்யா.கணேஷ்பாபு இயக்கும் படம் ‘யமுனா’. புதுமுகம் சத்யா ஹீரோ. ஸ்ரீரம்யா ஹீரோயின். இதுபற்றி சத்யா கூறியதாவது:பாலுமகேந்திராவின் நடிப்பு பயிற்சி பள்ளியில் நடிப்பு கற்றேன். அதன் மூலம் இப்படத்துக்கு தேர்வானேன். படத்தின் முதல் காட்சியே தஞ்சாவூரில் புனர்குளம் என்ற ஊரில் உள்ள சுடுகாட்டில் நடந்தது.
அங்கு ஹீரோயினுடன் காதல் காட்சியில் நடித்தேன். முதன்முறையாக ஹீரோயினை தொட்டு நடிக்க வேண்டும் என்றபோது நடுக்கம் இருந்தது. அதுவும் சமாதிகளுக்கு நடுவில் காதல் காட்சி என்பதால் பயமும் இருந்தது. இயக்குனரும், ஹீரோயினும் கொடுத்த தைரியத்தில் நடித்தேன்.
நடிப்பில் பயிற்சி பெற்றிருந்தபோதும் வாய்ப்புக்காக இரண்டரை வருடம் அலைந்தேன். இயக்குனர் பாலா, வெற்றி மாறன் போன்றவர்களை சந்தித்து வாய்ப்பு கேட்டேன். சரியான நேரம் வரும்போது தருவதாக கூறினார்கள். யமுனா படத்தின் ஹீரோ தேர்வுக்கு சென்றபோது காட்சிகள் கொடுத்து நடிக்கச் சொன்னார் இயக்குனர். அதன்பிறகும் பலரை இன்டர்வியூ செய்தார். நான் தேர்வாவேனா என்பது சந்தேகமாக இருந்தது. இறுதியில் என்னை ஹீரோவாக்கினார். ஆரம்பகாலத்தில் எந்த வேடத்திலும் நடிக்க தயாராக இருந்தேன். இப்போது அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.
இவ்வாறு சத்யா கூறினார்.