Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
19
Jan
முந்தானை முடிச்சு 2ம் பாகத்தில் பாக்யராஜ்


சென்னை: ‘முந்தானை முடிச்சு 2 பாகம் இயக்குகிறீர்களா என்றதற்கு பதில் அளித்தார் பாக்யராஜ். ‘முந்தானை முடிச்சி 2 பாகம் எடுக்கிறீர்களா? என்கிறார்கள். இல்லை. அந்த படத்தில் எனக்கும் ஊர்வசிக்கும் பிறக்கும் குழந்தை பெரியவனாக வளர்ந்து அவனது வாழ்க்கையை மையமாக வைத்து கதைஅமைத்துக்கொள்வதாக என்னிடம் கேட்டார்கள். சரி என்று கூறினேன். குழந்தையின் பெற்றோராக நானும், ஊர்வசியும் நடிக்கிறோம். ‘அந்த 7 நாட்கள் படத்தில் சினிமாவில் இசை வாய்ப்பு தேடி அலைவேன். அதன்தொடர்ச்சியாக சினிமா இசை அமைப்பாளாக ஆகி அதன்பிறகு நடக்கும் சம்பவங்களை படமாக்க கேட்டனர். சரி என்றேன்.

‘இன்றுபோய் நாளை வா பட கதையை ‘லட்டு தின்ன ஆசையா என்ற பெயரில் சந்தானம், ராமநாராயணன் தயாரித்திருக்கிறார்கள். இக்கதை உரிமை எனக்குத்தான் சொந்தம். என்னிடம் உரிமை வாங்கவில்லை. இதற்காக பணம் எதுவும் நான் பெறவில்லை. இது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறேன். விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி படத்தின் டைட்டிலுக்கு முன் எனக்கு நன்றி கார்டு போடச் சொல்லி இருக்கிறார். வசூல் அக்கவுன்ட் தரும்படியும் மனுவில் கோரி இருக்கிறேன். இவ்வாறு பாக்யராஜ் கூறினார்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran