நடிகர்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி தொடக்க விழா மும்பையில் 19ம் தேதி நடக்கிறது.
கமல் இயக்கி நடித்துள்ள ‘விஸ்வரூபம் வரும் 25ம் தேதி தமிழ்நாட்டில் 500க்கும் கூடுதலான தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ளது.
அஜீத்துடன் ‘பில்லா படத்தில் நடித்த நயன்தாரா மீண்டும் விஷ்ணுவர்த்தன் இயக்கும் புதிய படத்திலும் அஜீத்துடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். ‘பில்லா‘வில் டு பீஸ் நீச்சல் உடையில் நடித்த நயன்தாரா அதை மிஞ்சும் விதத்தில் இப்படத்தில் நடித்துள்ளாராம்.
ராஜசேகர் இயக்கும் ‘யா யா படத்தில் சிவா, சந்தானத்துடன் பவர் ஸ்டார் சீனிவாசனும் நடிக்கிறார்.
நீண்ட நாள் காதலன் ரிதேஷ் தேஷ்முக்கை கடந்த ஆண்டு மணந்துக் கொண்ட ஜெனிலியா சமீபத்தில் திருப்பதி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.