பொங்கல் கோல போட்டி வென்றவர்களுக்கு பட்டுப்புடவை
தாம்பரம்-பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் நகராட்சி 22வது வார்டு ஆனந்தபுரத்தில் அனைத்து கட்சி சார்பில் கோல போட்டிகள் நடந்தது காங்கிரசை சேர்ந்த ஜிடிசேகர் தலைமை தாங்கினார் அதிமுகவை சேர்ந்த கூத்தன் வரவேற்றார்
தாம்பரம் நகராட்சி முன்னாள் தலைவர் மணி, கோல போட்டியை தொடங்கி வைத்தார். 150 பெண்கள் கலந்து கொண்டனர் வெற்றி பெற்ற 4 பேருக்கு பட்டுப்புடவை பரிசாக வழங்கப்பட்டது 15 பேருக்கு ஆறுதல் பரிசும், ஆர்வத்துடன் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது விழாவில் நகரமன்ற துணைத்தலைவர் கோபிநாத், கவுன்சிலர்கள் சிவராமன், கிருஷ்ணமூர்த்தி, ஷீலா பிரபாகரன், ஜிடிஎஸ்பிரபு, மஜித் உட்பட பலர் கலந்து கொண்டனர்