வழிப்பறி திருடன் கைது 27 பவுன் நகை பறிமுதல்
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் அடிக்கடி திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வந்தன. குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் இருந்த பைனான்ஸ் ராஜா (35) கடந்த அக்டோபர் 17ம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்தார். அதன்பிறகு தான் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்ததும் விசாரணையில் தெரியவந்தது. பைனான்ஸ் ராஜா வெள்ளகோவிலில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று அவரைப் பிடித்து விசாரித்ததில், வழிப்பறி மற்றும் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
வெள்ளகோவில் மற்றும் காங்கயம் பகுதியை சேர்ந்த பெண்களிடம் பறித்த 27 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.