Untitled Document
Thai Poosam Function 2013
2013
16
Jan
டெல்லி கோர்ட் பரபரப்பு தீர்ப்பு ஊழல் வழக்கில் அரியானா மாஜி முதல்வர் கைது


ஊழல் வழக்கில் அரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. உடனடியாக அவரை கைது செய்யவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தண்டனை விவரம் வரும் 22ம் தேதி அறிவிக்கப்படுகிறது.

அரியானா மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இதற்கு முன்பு ஓம்பிரகாஷ் சதவுதாலாவின் தேசிய லோக் தள கட்சி ஆட்சி நடைபெற்றது. ஓம்பிரகாஷ் முதல்வராக இருந்தார். அவரது ஆட்சி காலத்தில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதில் பெருமளவு முறைகேடு நடைபெற்றிருப்பதாக  ஓம்பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் 53 பேர் மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டது. டெல்லியில் உள்ள கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஓம்பிரகாஷ் சவுதாலா, அஜய் சவுதாலா உள்பட 55 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். தற்போது ஜாமீனில் வெளியில் உள்ள அவர்களை உடனடியாக கைது செய்யவும் உத்தரவிட்டார்.

 வரும் 22ம் தேதி தண்டனை விவரம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு சமயத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி அறிவித்திருந்தார். அதன்படி அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். அவர்களை கைது செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து அவர்களை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana