கால்ஷீட் கேட்டு வரும் கோலிவுட் தயாரிப்புகளை காஜல் ஹீரோயின் போட்டுத் தாக்குறாராம்... தாக்குறாராம்... இந்த தாக்குதல் ‘மணி மேட்டருங்கிறதால யாரும் புகார் தர முடியலாயம். கால்ஷீட் வேணும்னு கேட்டா ஒன் சி தாங்கன்னு கறாரா சொல்றதோட மத்த செலவெல்லாம் தனின்னு சொல்றாராம். இதுல கலங்கிப்போற தயாரிப்புங்க அபவுட்டர்ன் ஸ்டெப் போடுறாங்களாம்... போடுறாங்களாம்... சம்பளம் ரொம்ப உசத்திட்டீங்களேன்னு யாராவது நடிகைகிட்ட கேட்டா, ஒரு காலத்துல என்னை ராசி இல்லாதவன்னு சென்டிமென்ட் பாத்து வேணாம்னு ஒதுக்க¤னவங்ககிட்டதான் கேக்கறேன். இது தப்பில்லேன்னு வேலுநாயக்கர் பாணியில பஞ்ச் அடிக்கிறாராம்... அடிக்கிறாராம்...
கஜினி படம் தயாரிச்சவரு ரொம்ப நாளைக்கப்புறம் மறுபடியும் தயாரிப்புல குதிச்சிருக்காராம்... இருக்காராம்... வருஷ கணக்குல பெண்டிங்ல இருந்த லவ் பட ஹீரோ நடிக்க¤ற படத்துக்கான ஷூட்டிங்கை ஒருவழியா முடிச்சிட்டாராம். வழக்கமா ஒயிட் அண்ட் ஒயிட்ல வர்ற தயாரிப்பு சென்டிமென்ட் காரணமா அந்த ஸ்டைலுக்கு முழுக்கு போட்டுட்டாராம். ராசி, ஜோசியம்பாத்து அதுக்கேத்த மாதிரி கலர் கலரா டிரஸ்போட ஆரம்பிச்சிட்டாராம்... ஆரம்பிச்சிட்டாராம்...
சேவை வரிக்கு எதிரா கோலிவுட்காரங்க உண்ணாவிரத போராட்டம் நடத்தினாங்க. இதுல பிரகாச வில்லனும் கலந்துகிட்டாரு. தன்னோட ஆத்ம நண்பரான தாடிக்கார டான்ஸ் மாஸ்டரையும் போராட்டத்துல கலந்துக்க வற்புறுத்தினாராம்... வற்புறுத்தினாராம்... Ôஇப்போ நான் பாலிவுட் டைரக்டர். சென்னை பக்கம் திரும்ப கூப்பிடாதீங்கÕன்னு டான்சரு தெனாவட்டா சொல்லிட்டாராம்... சொல்லிட்டாராம்...
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook