திருவள்ளூர் திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் முருகன் (40). பழ வியாபாரி. இவரது உறவினர் வேணு (38). இருவரும் நேற்று முன்தினம் பைக்கில் பேரம்பாக்கத்தில் இருந்து கூவம் கிராமத்துக்கு சென்றனர். அப்போது எதிரே வந்த மினி லாரி, பைக் மீது மோதியது. பலத்த காயம் அடைந்த இருவரையும் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் வேணு இறந்தார். தொடர்ந்து முருகன் சிகிச்சை பெறுகின்றார். விபத்து தொடர்பாக, மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின¢றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook