ஊத்துக்கோட்டை மருமகனை கத்தியால் குத்திய மாமியார், சகளைகளை போலீசார் கைது செய்தனர். ஊத்துக்கோட்டை அருகே பேரிட்டிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (33). விவசாயி. இவரும் மாமியார் சுசீலா, சகளைகள் வெற்றி, அன்பு. நால்வரும் சேர்ந்து டிராக்டர் வாங்கி, மணல் குவாரிக்கு வாடகைக்கு விட்டு சம்பாதித்தனர். இதில் வந்த வருமானத்தில் பங்குத் தொகையை ராமதாசுக்கு கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ராமதாஸ், தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. இது சம்பந்தமாக நேற்றும் பிரச்னை ஏற்பட்டபோது ராமதாஸை கத்தியால் குத்திவிட்டனர். இதை தடுத்த ராமதாஸ் மனைவி மதியழகியை கட்டையால் அடித்து போட்டுவிட்டு சுசீலா மற்றும் வெற்றி, அன்பு ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த கணவன், மனைவி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பென்னலூர்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து சுசீலா, வெற்றி, அன்பு, ஆகியோரை கைது செய்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook