பெண் பயணியிடம் 7 பவுன் அபேஸ்
செஞ்சி: திருவண்ணாமலை மாவட்டம் சந்தைபுதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி துளசி (55). சென்னையில் இருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு நேற்று அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். செஞ்சி பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை காணாது திடுக்கிட்டார். பஸ் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து துளசி செஞ்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓடும் பஸ்சில் நகையை அபேஸ் செய்த மர்மநபரை தேடி வருகின்றனர்.