Untitled Document
Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes
2013
11
Jan
இந்தோனேசியாவில் பயங்கர பூகம்பம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் நேற்று பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்தோனேசியாவில் கடந்த 2004ம் ஆண்டு சுமத்ரா தீவில் கடலுக்கடியில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து சுனாமி பேரலைகள் தாக்கின. இது இலங்கை, இந்தியா உள்பட பல நாடுகளில் நடந்த சுனாமி தாக்குதலில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக இறந்தனர். அதனால் இந்தோனேசியாவில் சிறு அளவில் நில அதிர்வு ஏற்பட்டாலும் மக்கள் பதற்றம் அடைகின்றனர்.

இந்நிலையில், நேற்று இந்தோனேசியாவின் ஏஸ் மாகாணத்தில் பூகம்பம் ஏற்பட்டது. கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியில் வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், Ôசுமத்ரா தீவு பகுதியில் இரவு 10.47 மணிக்கு பூகம்பம் பதிவானது. ரிக்டரில் 6.0 புள்ளிகள் பதிவாகி உள்ளதுÕ என்று தெரிவித்தது. எனினும் சேத விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியாகவில்லை.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana