பைக் மீது லாரி மோதி அண்ணன், தம்பி பலி
உடுமலை: திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் ஒன்றியம் சுங்காரமடக்கை சேர்ந்தவர்கள் வன்னியப்பன்(40), அங்கமுத்து(35). சகோதரர்கள். தச்சு தொழிலாளர்கள். இருவரும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று விட்டு நேற்று வீடு திரும்பினர். பிறகு தலைமுடி வெட்டுவதற்காக இருவரும் பைக்கில் குடிமங்கலம் நால்ரோடு பகுதிக்கு சென்றனர். மின்சாரம் இல்லை. சிறிது நேரம் கழித்து வாருங்கள் என சலூன்கடைக்காரர் கூறியுள்ளார். சகோதரார்கள் இருவரும் சொந்த ஊர் புறப்பட்டனர்.
பொள்ளாச்சிதாராபுரம் ரோடு வேலப்பநாயக்கன்புதூர் குளம் அருகே வந்தபோது, கழிவறை சுத்தம் செய்யும் டேங்கர் லாரி ஒன்று பைக் மீது மோதியது. அங்கமுத்து அதே இடத்தில் பலியானார். படுகாயம் அடைந்த வன்னியப்பனை உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.