தேமுதிக நிர்வாகிகளுக்கு உதை மாவட்ட செயலாளருக்கு வலை
தாராபுரம்: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நகர, ஒன்றிய தேமுதிக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அலங்கியம் காமராஜர் நகர் கிளை செயலாளர் சக்திவேல்(28), கொம்பூர் கிளை செயலாளர் சுந்தரம் (39) ஆகியோரிடம் மாவட்ட நிர்வாகிகள் சிலர் பணம் பெற்று கொண்டு உயர் பொறுப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. கூட்டத்தில் இருவரும் தங்களிடம் பெற்ற பணத்தை திரும்ப தரும்படி கேட்டு வாக்குவாதம் செய்தனர். திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் கீர்த்தி சுப்பிரமணி, துணை செயலாளர் பங்க் மகேஷ்குமார், ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, நகர செயலாளர் மணி ஆகிய 4 பேரும் சேர்ந்து இருவரையும் அடித்து உதைத்தனராம். காயம் அடைந்த இருவரும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான 4 பேரையும் தேடி வருகின்றனர்.