காட்டுத்தீ அபாயம் தடுக்க வனத்துறையினர் ஆயத்தம்
ஊட்டி: நீலகிரியில் கடந்த 2 மாதங்களாக உறைபனி நிலவுகிறது. முதுமலை, மசினகுடி உள்ளிட்ட வனங்களில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து கருகி வருகின்றன. காட்டு தீ ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கையாக வடக்கு வன கோட்ட வன ஊழியர்களுக்கான தீத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் ஊட்டியில் நடந்தது. மாவட்ட வன அலுவலர் ஆசிஸ்குமார் ஸ்ரீவத்சவா தலைமை வகித்து பேசுகையில், ‘மாவட்டத்தில் பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால், வனத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. காட்டு தீ ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. காட்டு தீ ஏற்படாமல் இருக்க வன ஊழியர்கள் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும்’ என்றார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தீ அணைக்கும் முறை குறித்த செயல்விளக்கங்கள் செய்து காட்டப்பட்டன.