பெண்கள் பாதுகாப்பு பற்றிய 2 படத்துக்கு வரிவிலக்கு
சென்னை: பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றிய 2 மலையாள படத்துக்கு கேரள அரசு வரிவிலக்கு அளித்தது. டெல்லி மாணவி பலாத்காரம் சம்பவத்துக்கு பிறகு அதுபோன்ற சம்பவங்களை மையப்படுத்தி கதைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பாபு ஜனார்த்தன் டைரக்ட் செய்தி ருக்கும் மலையாள படம் ‘லிசம்மாயிட்டே வீடுÕ, ராஜேஷ் இயக்கிய படம் ‘என்டேÕ. இந்த இரண்டு படத்துக்கும் கேரள அரசு வரிவிலக்கு அளித்திருப்பதாக உள்ளாட்சி நிர்வாக அமைச்சர் டிஎம்கே முனீர் கூறினார்.
இளம் வயது பெண் ஒருவர் தொடர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகிறார்.
இதனால் பாதிக்கப்பட்ட அவர் பல ஆண்டுகள் ஆகியும் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார். இந்த கதையை மையப்படுத்தி ‘லிசம்மா..Õ படம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘என்டே’ படம் சமுதாயத்தில் பெண்களுக்கு பாதுகாப்பின்மை, குடும்பம் மற்றும் சமுதாயத்தால் எப்படி கொடுமைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதையாகும். பெண்களுக்கு எதிரான செயல்களை வெளிச்சம் போட்டு காட்டி இருப்பதையடுத்து இரு படங்களுக்கும் வரிவிலக்கு அளித்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.