‘அட்டகத்தி நந்திதா நடிக்கும் ‘நளனும் நந்தினியும் படத்துக்காக ஸ்ரேயா கோஷல் பாடிய பாடல் மும்பையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இப்படத்தின் கேசட் வெளியீடு ஏப்ரல் மாதம் சுவிட்சர்லாந்தில் நடக்க உள்ளது.
நிறைய ஹீரோயின்கள் போட்டியில் இருந்தாலும் நேர்மையான உழைப்பின் மூலம் தனக்கென தனி இடத்தை பிடிப்பாராம் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா. இவர் ‘பட்டத்து யானை படத்தில் விஷால் ஜோடியாக நடிக்கிறார்.
செல்வராகவன் இயக்கும் ‘இரண்டாம் உலகம் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒரு பாடல் பாடி இருக்கிறார் தனுஷ்.
இந்தியிலிருந்து தமிழில் மொழி மாற்றமாகும் பிரபுதேவாவின் 3டி படம் ‘ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ் பாடல் வெளியீடு இம்மாதம் 13ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
‘ராஞ்ஜா படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங்குக்காக டெல்லி சென்ற தனுஷ் நடுங்கும் குளிரில் உறைந்தபடி நடிக்கிறாராம். ஜூன் மாதம் படம் ரிலீஸ் ஆக உள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook