‘கில்லாடி’ படத்தை இயக்கும் ஏ.வெங்கடேஷ், அடுத்து புதுமுகங்களை வைத்து ‘கண்ணன் என்னும் மன்னன்’ என்ற படம் இயக்குகிறார். இதற்கிடையே, 6 படங்களில் நடித்தும் வருகிறார்.
‘பச்சை என்கிற காத்து’ பட இயக்குனர் கீரா, 1950 முதல் 2012 வரையிலான 4 காலகட்ட காதலை சொல்லும் கதையாக ‘கொஞ்சம்’ என்ற புதிய படத்தை புதுமுகங்களை வைத்து இயக்குகிறார்.
‘ஒன்பதுல குரு’ படத்தில் வினய், லட்சுமிராய் நடிக்கின்றனர். 4 பாடல்கள் இடம்பெறும் இப்படத்துக்கு கே இசையில் நா.முத்துக்குமார் ‘வா மச்சி வா’ என்ற பாடல் எழுதி இருக்கிறார். இப்படத்தின் 2ம் பாகம் இயக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் பி.டி.செல்வகுமார்.
72 வயதாகும் கே.ஜே.ஜேசுதாஸ், பல்வேறு மொழிகளில் 50 ஆயிரம் பாடல்களை பாடி இருக்கிறார். இப்போதெல்லாம் மிக குறைந்த எண்ணிக்கையிலான பாடல்கள் பாடவே ஒப்புக்கொள்ளும் ஜேசுதாஸ், கர்நாடக இசை பற்றிய அறிவை ரசிகர்கள் மத்தியில் பரப்புவதில் கவனம் செலுத்துகிறாராம்.
அக்ஷய்குமாருடன் பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் புதிய படத்தில் டீச்சர் வேடம் ஏற்கிறாராம் காஜல் அகர்வால்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook