காட்டன் வீர ஹீரோ, சந்தன காமெடி நட்புல விரிசல் விழுந்திருச்சாம்... விழுந்திருச்சாம்... தானுண்டு தன்னோட வேல உண்டுன்னு சந்தன காமெடி இருந்தப்ப யார்கிட்டயும் உரசல் ஏற்படலயாம். சமீபமா காட்டன் வீர ஹீரோ படத்துல நடிச்சிட்டிருந்தப்ப, அதபத்தி லூஸ் டாக் விட்டாராம். இது ஹீரோ காதுக்கு போக கொதிச்சிட்டாராம். இனிமே என்னோட படத்துல சந்தன காமெடிக்கு இடமில்லன்னு சொல்லிட்டாராம்... சொல்லிட்டாராம்...
மகள்கள களத்துல இறக்கிவிட்டிருக்கிற ராதை மம்மி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து உட்காந்துடுறதால இயக்கங்களால வேல வாங்க முடியலையாம்... முடியலையாம்... கவர்ச்சியா வேணும், கொஞ்சம் கிரங்கடிக்கறாப்ள மூவ்மெண்ட் வேணும்னு இயக்கங்க சொல்றப்ப டாட்டருங்க தாய் குலத்த லுக் விட்றாங்களாம்... விட்றாங்களாம்... இது பட யூனிட்டுக்கு தர்மசங்கடத்த ஏற்படுத்துதாம். இதை அரசல் புரசலா மம்மி காதுல விழறமாதிரி சிலர் சொன்னாங்களாம். இனி டாட்டருங்க நடிக்கிற ஷூட்டிங் பக்கம் அதிகமா தலைகாட்டறதில்லேன்னு மம்மி முடிவு பண்ணிருக்காராம்... இருக்காராம்...
அனன நடிக கோலிவுட்காரங்க மேல கோபமா இருக்காராம்... இருக்காராம்... சம்பளம் உசத்தி கேக்கறாருன்னு முதல்ல சிலரு புரளி கௌப்புனாங்களாம். அந்த மேட்டர் அடங்கணுதும், மேரேஜ் மேட்டர்ல ஏற்பட்ட குழப்பத்த கோலிவுட்காரங்க பெரிசு படுத்திட்டாங்கன்னு ஃபீல் பண்றாராம். கோபத்துல இருந்தவர்கிட்ட கோலிவுட் இயக்கம் கால்ஷீட் கேட்டாராம். என்னை பத்தி கன்னாபின்னான்னு கொளுத்திபோட்ற இண்டஸ்ரிகாரங்கள பாக்க விருப்பமில்ல. எவ்ளோ பேமெண்ட் கொடுத்தாலும் நடிக்க மாட்டேனு மறுத்துட்டாராம்... மறுத்துட்டாராம்..
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook