டியூஷன் சென்டரில் நடக்கும் கதை
சென்னை: ‘நினைத்தேன் வந்தாய்‘, ‘ஹலோ‘, ‘பிரியமானவளே போன்ற படங்களை இயக்கியவர் செல்வபாரதி. அடுத்து ‘காதலை தவிர வேறொன்றுமில்லை‘ படத்தை இயக்குகிறார். அவர் கூறியதாவது: இப்படத்திற்கு டியூஷன் சென்டர் கதைக்களமாக அமைந்துள்ளது. காதலுக்கும், நட்புக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு இழையோடும். அந்தவொரு உணர்வுடன் பழகுகின்றனர் யுவன், சரண்யா மோகன். இவர்களின் உறவு என்னவாகிறது என்பதுதான் கதை.
இதில் முக்கிய வேடத்தில் நடிக்க ராகுல், ரோஹித் உள்ளிட்ட பல மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்காக விடுமுறை நாட்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஷூட்டிங் நடத்தப்பட்டது. நிறைய படங்களை இயக்கி இருந்தாலும் இப்படத்தை எழுதி இயக்குவதுடன் தயாரிப்பு பொறுப்பு ஏற்றிருக்கிறேன். ‘பசங்க‘ சசிகுமார், ‘மெரினா‘ பாண்டிராஜ் இருவரும் இயக்குனர்களாக இருந்து தயாரிப்பாளராகவும் ஆகி இருக்கிறார்கள். அவர்கள்தான் எனக்கு இன்ஸ்பிரேசன். ஒளிப்பதிவு பூபதி. இசை ஸ்ரீகாந்த் தேவா. இவ்வாறு செல்வபாரதி கூறினார்.