Untitled Document
Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes
2012
22
Dec
பலாத்காரம் செய்யப்பட்ட மாணவிக்கு அரசு வேலை

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

லக்னோ: ஓடும் பஸ்சில் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவிக்கு அரசு பணியும், ரூ.5 லட்சம் நிவாரணமும் வழங்கப்படும் என உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். டெல்லியில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிசியோதெரபி பயிற்சி பெற்று வந்த மாணவி ஒருவர் கடந்த 16ம் தேதி ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாசம் நேற்று முதல் விலக்கிக் கொள்ளப்பட்டது. அவரது குடல் முழுவதும் வெட்டி எடுக்கப்பட்டு விட்டதால் குடல் மாற்று அறுவை சிகிச்சை செய்வது குறித்து டாக்டர்கள் ஆலோசனை செய்து வருகிறார்கள். மாணவிக்கு குடல் மாற்று அறுவை சிகிச்சையை இலவசமாக செய்து தர கங்காராம் மருத்துவமனை முன்வந்துள்ளது. முதன்முதலில் குடல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது அந்த மருத்துவமனையில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சிகிச்சை பெற்று வரும் மாணவிக்கு பல மாநில அரசுகள் உதவிகளை அறிவித்துள்ளது.

முதன்முதலாக உத்தரகாண்ட் அரசு மாணவியின் மருத்துவ செலவுகளுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி அறிவித்தது. மாணவியை வெளிநாட்டுக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கவும் தயாராக இருப்பதாக டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்தார். மாணவி உ.பி. மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாக உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் இரண்டு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்நிலையில் மாணவிக்கு அரசு பணியும், ரூ.5 லட்சம் நிவாரணமும் வழங்கப்படும் என உ.பி. அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு விட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana