ஹரி இயக்கும் ‘சிங்கம் பார்ட் 2வில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடிக்கின்றனர். முதல்பாகத்தில் ஏட்டு எரிமலை கதாபாத்திரத்தில் நடித்த விவேக் அதே வேடத்தில் தொடர்கிறார். சந்தானமும் மற்றொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தென்னிந்திய வீரப் பெண்மணி ‘ராணி ருத்ரமா தேவி சரித்திரம் தமிழ், தெலுங்கு மொழியில் உருவாகிறது. அனுஷ்கா நடிக்கிறார். குணசேகர் இயக்குகிறார். 3 டியில் உருவாகும் இதன் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் நடக்கிறது.
‘முனி இரண்டாம் பாகமாக ‘காஞ்சனா படத்தை இயக்கிய ராகவா லாரன்ஸ் 3ம் பாகமாக ‘கங்கா என்ற படத்தை இயக்குகிறார். ஹீரோயினாக டாப்ஸி நடிக்கிறார். இதற்கிடையில் ‘காஞ்சனா படம் 3டியில் மாற்றப்பட்டு வருகிறது.
தமிழில் வெளியான ‘பீட்சா படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உரிமை வாங்கி இருக்கிறார் பிஜய் நம்பியார். கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ரீமேக் ஆகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘பிரியாணி த்ரில்லர் படமாக உருவாகிறதாம்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook