‘ஆதிபகவன் பட ஹீரோயின் நீது சந்திரா போஜ்புரி மொழியில் தயாரித்துள்ள ‘தேஸ்வா படம் கோவாவில் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இப்படத்தை அவரது சகோதரர் நிதின் சந்திரா இயக்கி உள்ளார்.
‘யுவன் யுவதி, ‘டேம் 999 படத்தில் நடித்த ரிமா கல்லிங்கல் மலையாளத்தில் ‘அரேபியன் சபாரி என்ற படத்தில் நடிக்கவிருந்த வாய்ப்பு கைநழுவியது. இப்போது இதில் பாவனா நடிக்க உள்ளாராம்.
பார்த்திபன் கனவு, பிரிவோம் சந்திப்போம், மந்திர புன்னகை படங்களை இயக்கிய கரு பழனியப்பன் அடுத்து ‘ஜன்னலோரம் என்ற படத்தை இயக்குகிறார்.
புதிய படத்துக்கான ஸ்கிரிப்ட் உருவாக்கும் பணியை பாதிதான் நிறைவு செய்திருக்கும் இயக்குனர் கே.வி.ஆனந்த், விஜய் உள்ளிட்ட யாரிடமும் கால்ஷீட் பற்றி பேசவில்லையாம். ஸ்கிரிப்ட் பணி முழுவதுமாக முடிந்தபிறகுதான் ஹீரோவை அணுகுவாராம்.
சமீபத்தில் ஃபுட் பாய்சனால் பாதிக்கப்பட்ட மனிஷா கொய்ராலா மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றார். மும்பை வீட்டில் ஓய்வு எடுக்கும் அவருக்கு அவரது தாயார் சூப்பும், கிரீன் டீயும் கொடுத்து உடலை தேற்றினாராம்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook