தல பட தலைப்பு பிரச்னை : டெக்னீஷியன்களை பாடாய் படுத்தும்
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
பில்லா 2 இயக்கத்தோட டைரக்ஷன்ல நடிக்கற தல ஹீரோ படத்துக்கு டைட்டில் வெக்கறதுல மண்ட இடி நீடிக்குதாம்... நீடிக்குதாம்... ஷூட்டிங் கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க டைட்டில் பிரச்னை டென்ஷனை ஏத்தி பட யூனிட்ட பாடாபடுத்துதாம். தலயோட இமேஜுக்கு ஏத்தாப்ல டைட்டில் இருக்கணும்னு இயக்கம் சொல்லிட்டாராம். இதால உதவி இயக்கம் முதல் எல்லா டெக்னிஷியனுங்ககிட்டயும் டைட்டில் சொல்லச் சொல்லி லிஸ்ட் எடுக்கறாங்களாம். இதுல பொருத்தமான டைட்டில செலக்ட் பண்ணபிறகே அத தல நடிகர் ஒப்புதலோட வெளில சொல்ல இயக்கம் முடிவு பண்ணிருக்காராம்... இருக்காராம்...
புரமோஷனுக்காக டாப் ஹீரோக்கள் போறப்ப கூடவே செக்யூரிட்டிகளும் போறாங்களாம்... போறாங்களாம்... ஹீரோயின் பாடுதான் பாவமா இருக்காம். பட யூனிட்ட நம்பி போற ஹீரோயினுங்க ஃபேன்ஸுங்க நெரிசல்ல சிக்கி தவிக்றாங்களாம். இப்படித்தான் சினேகமான உல்லால் நடிகை டோலிவுட்ல ஒரு படத்தோட புரமோஷனுக்கு போனப்ப நெரிசல்ல சிக்கிட்டாராம். தப்ப முயன்றப்ப தவறி விழுந்தாராம். இதுல அவரோட கால்ல பலமா அடிபட்டிடுச்சாம். இத கேள்விப்பட்ட மத்த ஹீரோயினுங்க பாதுகாப்பில்லாம பட புரமோஷனுக்கு போக தயங்குறாங்களாம்... தயங்குறாங்களாம்...
நடிகையாகணும்கிற எண்ண மெல்லாம் ஆக்ஷன் கிங் டாட்டருக்கு இல்லையாம்... இல்லையாம்... திடீர்னு ஸ்டண்ட் கோழி நடிகரோட நடிக்க வாய்ப்பு வந்ததும் டாடி சம்மதத்தோட ஒப்புக்கிட்டாராம். நடிப்புக்காக எந்த டிரைனிங்கும் இல்லாததால ஷூட்டிங் ஸ்பாட்ல திணறுகிறாராம். இத கேள்விப்பட்ட டாடி நடிகர் டாட்டருக்கு தினமும் நடிப்பு டிரைனிங் தர்றாராம்... தர்றாராம்...