ஆவடி ராணுவ தொழிற்சாலையில் அப்ரன்டிஸ் : ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு
சென்னை ஆவடியில் உள்ள போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத் தில் (CVRDE) அப்ரன்டிஸ் பயிற்சியளிக்கப்படுகிறது.
அப்ரன்டிஸ் பயிற்சி அளிக்கப்பட உள்ள டிரேடு கள் மற்றும் காலியிடங்கள் விவரம்: பிட்டர்-20, டர்னர்-5, மெஷினிஸ்ட்- 10, மோட்டார் வாகன மெக்கா னிக்- 10, எலக்ட்ரீஷியன்-11, வெல்டர்-4, புரோகிராமிங் மற்றும் சிஸ்டம்ஸ் அட்மினிஸ்டிரேஷன் அசிஸ்டென்ட்-5.
தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் 2 வருட ஐடிஐ. வெல்டர் மற்றும் புரோகிராமிங் அண்ட் சிஸ்டம்ஸ் அட்மினிஸ்டிரேஷன் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் சம்பந்தப்பட்ட டிரேடில் நேஷனல் டிரேடு சர்ட்டிபிகேட் பெற்றிருக்க வேண் டும். விண்ணப்ப கட்டணம்: ரூ.30/- இதை The Director, CVRDE, Avadi, Chennai என்ற பெயரில் கிராஸ் செய்யப்பட்ட போஸ்டல் ஆர்டர் எடுக்க வேண்டும். மாதிரி விண்ணப்பம் மற்றும் விவரங்களுக்கு www.cvrde.gov.in இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The Director, CVRDE, Avadi, Chennai 600054.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.27.