மத்திய போலீஸ் படைகளில் ஒன்றான அசாம் ரைபிள்ஸ் ஹவில்தார் கிளர்க், வாரன்ட் ஆபீசர் ஆகிய பணியிடங்களுக்கு பிளஸ் 2 படிப்புடன் டைப்பிங் மற்றும் ஷார்ட் ஹேண்ட் படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1. Havildar Clerk: 328 இடங்கள் (எஸ்சி-35, எஸ்டி-67, ஓபிசி-55, பொது-171). தகுதி: கணித பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி. அத்துடன் ஆங்கில டைப்பிங்கில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அல் லது இந்தி டைப்பிங்கில் நிமிடத்திற்கு 25 வார்த்தை கள் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 2. Warrant Officer (PA): 28 இடங்கள்.(பொது-21, எஸ்சி-1, எஸ்டி-4, ஓபிசி-2). தகுதி: கணித பாடத்து டன் பிளஸ் 2 தேர்ச்சி. அத்துடன் ஆங்கில சுருக் கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் வேகமும் டைப்பிங்கில் நிமிடத்துக்கு 40 வார்த்தை கள் டைப்பிங் செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். வயது: 1.8.2012ன்படி 18லிருந்து 23க்குள். உடற் தகுதி: உயரம் 170 செ.மீ., மார்பளவு: 80-85 செ.மீ., விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பின் தகுதியானவர்கள் நேரடி ஆள்சேர்ப்புக்கு அழைக் கப்படுவர். உடல்திறன் தேர்வு, எழுத்துத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக் கப்படுவர். விண்ணப்ப கட்டணம்: ரூ.50/- இதை Directorate General Assam Rifles, SBI DGAR, Shillong, Code No.7338 என்ற பெயரில் பாரத ஸ்டேட் வங்கியில் டிடியாக எடுத்து அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.assamrifles.gov.in இணைய தளம் அல்லது அக்.27-நவ.2 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூசை பார்க்கவும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Directorate General Assam Rifles, (Recruitment Branch), Laitumkharh Post, Shillong, Meghalaya 793 011. கடைசி நாள்: நவ.20.