‘கோ’ வில்லன் அஜ்மல் அடுத்து ‘வெற்றி செல்வன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
தனுஷ் நடித்த ‘3’ படத்தில் அறிமுகமான இசை அமைப்பாளர் அனிரூத் அடுத்து தனுஷ் தயாரிக்கும் ‘எதிர்நீச்சல்’ படத்துக்கு இசை அமைக்கிறார். இப்படத்திற்கு தனுஷ் இரண்டு பாடல் எழுதி பாடி உள்ளார். அத்துடன் பாலிவுட் பாடகர் ஹனி சிங், பாப் பாடகர் ஆதி ஆகியோர் இரண்டு பாடல்கள் பாடுகின்றனர்.
பாலிவுட்டில் சேகர் கபூர் இயக்கிய ‘மிஸ்டர் இந்தியா’ படத்தின் 2ம் பாகத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார் போனி கபூர். முதல் பாகத்தில் நடித்த அனில் கபூர், ஸ்ரீதேவி முக்கிய வேடத்தில் நடிக்க சல்மான் கான் பிரதான வேடத்தில் நடிக்க பேச்சு நடக்கிறது. ‘மிஸ்டர் இந்தியா’ முதல்பாகம் பாக்யராஜ், மீனாட்சி சேஷாத்ரி நடிக்க ‘என் ரத்தத்தின் ரத்தமே’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆனது.
‘சேட்டை’ படத்துக்கு பிறகு ‘அலங்காரம்’ என்ற படத்தை இயக்க உள்ளார் கண்ணன்.
பிறந்தநாளையொட்டி கமல்ஹாசன் அளித்த இரவு விருந்தில் கலந்துகொண்டார் ரஜினிகாந்த். ஒரு மணி நேரம் இருவரும் மனம்விட்டு பேசிக்கொண்டிருந்தார்களாம்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook