சென்னை: மழையால் சுவர் இடிந்து விழுந்து இறந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் கொசவன்பேட்டையை சேர்ந்த யோக லட்சுமி, கடந்த மாதம் 31ம் தேதி மழையினால் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் கொட்டிவாக்கத்தை சேர்ந்த தனலட்சுமி குடிசை வீடு இடிந்து விழுந்ததால் இறந்தார். இவர்களின் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கலை தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரது குடும்பத்துக்கும் தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கவும் செங்கல்பட்டு அருகே கடந்த 24ம் தேதி அரசுப் பேருந்து மோதியதில் ஆட்டோவில் சென்ற பாடியைச் சேர்ந்த ஜெயசீலன் உயிரிழந்தார்.இவரது குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook