Untitled Document
Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes
2012
04
Nov
பஞ்சமி நிலங்களை முழுமையாக மீட்டு தலித் மக்களுக்கு வழங்க வேண்டும்


ஆவடி: திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி புரட்சி பாரதம் கட்சி மாநாடு, ஆவடி அருகே கவரப்பாளையத்தில் நேற்று நடந்தது. கட்சித் தலைவர் பூவை.ஜெகன் மூர்த்தி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட தலைவர் ஜி.அசோகன், மாவட்ட செயலாளர் முகப்பேர் எம்.பி.கண்ணதாசன் வரவேற்று பேசினர். மாநில நிர்வாகிகள் நீதிமணி, சைமன்பாபு, மணவூர் மகா, ஜேம்ஸ், ரகுநாத், சரவணன், சாம்சன், சிவா, பன்னீர், சிகா, ஜெயசுந்தர், சுரேஷ்பாபு, நந்தகுமார் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் ஸ்ரீதர், அமுல்ராஜ், குமார் ஆகியோர் தொடக்க உரையாற்றினர். கட்சியின் நிறுவனர் பூவை.மூர்த்தி படத்தை மாநில துணை பொதுச் செயலாளர் முல்லை கே.பலராமன் திறந்து வைத்தார். அம்பேத்கர் படத்தை மாநில பொருளாளர் தொழுவூர் மாறன், காயிதே மில்லத் படத்தை மாநில துணை பொதுச்செயலாளர் பூங்காநகர் காமராஜ், பெரியார் படத்தை மாநில செயலாளர் பழஞ்சூர் வின்சென்ட், காரல் மார்க்ஸ் படத்தை மாநில தொழிற்சங்க தலைவர் முருகேசன் மற்றும் காமராஜர் படத்தை மாநில செயலாளர் பூண்டி பாபு ஆகியோர் திறந்து வைத்தனர். மாநாட்டு திடலில் கட்சி கொடியை மாநில செயலாளர் தளபதி செல்வம் ஏற்றினார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை போக்க கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கவேண்டும். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்துவதை மத்திய, மாநில அரசுகள் கண்டிக்க வேண்டும். சேது சமுத்திர திட்டம் தேவையில்லை என்ற முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி, எஸ்டி பட்டியலில் சேர்க்க தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு  தலித் மக்களுக்கு குடியிருப்பு மனைகளாகவும் விவசாய நிலங்களாகவும் வழங்க வேண்டும். திருமுல்லைவாயல் 8,வது வார்டில் சர்வே நம்பர் 320 முதல் 450 வரை நீர்பிடிப்பு பகுதி என அறிவிக்கப்பட்டதை ரத்து செய்து, குடியிருப்பு பகுதி மனைகளாக மாற்றித் தரும்படி சிஎம்டிஏவுக்கு அரசு உத்தரவிட வேண்டும். பாடி முதல் திருநின்றவூர் வரை சிடிஹெச் சாலையை விரிவுபடுத்த வேண்டும். கல்பாக்கம், நெய்வேலி அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழக தேவைக்கு போக மீதியை வெளி மாநிலத்துக்கு வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வை ரத்து செய்யவேண்டும் என்பது உள்பட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் மாநில நிர்வாகிகள் பூவை.முகிலன், ஏழுமலை, துரை, திருவேங்கடம், சிவஞானம், வீரமணி, அன்பரசு, அய்யப்பன், ரூஷேந்திர குமார், தர்மன், தாமஸ் பர்னபாஸ், கோல்டன் ரமேஷ் மற்றும் கோவிந்த், எஸ்.மாரி, ஆவடி ரங்கன், செல்வம், முல்லை குமார், ராஜசேகர், எஸ்.பிரேம், பிரபு, பெஞ்சமின், மைனாவதி ரமேஷ், பாண்டியன், மணிமாறன், திருவூர் அம்பேத்கர் பாபு, சித்துக்காடு ராஜா, சாம்சன், கூடப்பாக்கம் குட்டி, நயப்பாக்கம் மோகன், ஒதிகை தாமஸ், எரையூர் பார்த்திபன், தொழுவூர் சீனிவாசன், எம்.பி.முத்து ராமன், சிவராமன், ராக்கெட் ரமேஷ், தினகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மாவட்ட பொறுப்பாளர் பாஸ்கர் நன்றி கூறினார். முன்னதாக, ஆவடி நகர எல்லையான பருத்திப்பட்டில் ஜெகன் மூர்த்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டில் அவருக்கு வெள்ளி வாள் பரிசு வழங்கினர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana