தென் ஆப்ரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது ஆஸி. ஏ அணிக்கு எதிராக 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆடிவருகிறது. இதன் முதல் இன்னிங்சில் ஆஸி. ஏ 7 விக்கெட் இழப்புக்கு 480 ரன் எடுத்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்ரிக்கா இன்றைய 3வது நாள் ஆட்டத்தில் 75 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன் எடுத்தது. ஆம்லா 114 பந்தில் 7 பவுண்டரியுடன் 53 ரன் எடுத்த நிலையில் ரிட்டையர்டு ஆனார். டிவிலியர்ஸ் 15, ருடால்ப் 6 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook