ஒரே ஹேர் ஸ்டைலில் நடித்து வந்த கார்த்தி, வெங்கட்பிரபு இயக்கும் ‘பிரியாணி’ படத்திற்காக புதுவித ஹேர் ஸ்டைலுக்கு மாறி இருக்கிறார். இந்த கெட்டப்புடன் சமீபத்தில் நடந்த போட்டோ ஷூட்டில் பங்கேற்றார்.
தனது தந்தை இறந்தபோது ஆறுதல் கூறியவர்களுக்கு டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்திருக்கும் த்ரிஷா மீண்டும் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். ‘சமர்’ படத்துக்காக விஷாலுடன் பாடல் காட்சியில் நடிக்க மலேசியா புறப்பட்டு சென்றார்.
‘சேட்டை’ படத்துக்காக ஆர்யா, சந்தானம் பங்கேற்ற பைக் சேசிங் சண்டை காட்சியை டூப் போடாமல் பாதுகாப்பு அம்சங்களுடன் படமாக்கினார் இயக்குனர் கண்ணன்.
64 வயதாகும் பாலிவுட் ஹீரோயின் ஹேமமாலினி அழகு குறிப்புகள் பற்றி புத்தகம் எழுதுகிறார். அவரது சுயசரிதையை எழுத சில நிறுவனங்கள் அணுகி உள்ளன.
தமிழ் படங்களில் குத்தாட்டம் போட்ட மேக்னா நாயுடு ‘கல்யாண் கா சாமன்’ என்ற படம் மூலம் கன்னடத்தில் குத்தாட்ட நடிகையாக அறிமுகமாகிறார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook