திருவனந்தபுரம்-: மலையாளத்தில் ‘ரசிகன்Õ என்ற படத்தில் திலீப்புக்கு ஜோடியாக அறிமுகமானவர் சம்விருதா. தமிழில் ‘உயிர்Õ படத்தில் ஹீரோயினாக நடித்தார். தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்துள்ளார். சம்விருதாவுக்கும், கோழிக்கோட்டை சேர்ந்த அகில்ராஜுக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் முடிவு செய்தனர். அகில்ராஜ் கலிபோர்னியாவிலுள்ள வால்ட் டிஸ்னி நிறுவனத்தில் இன்ஜினீயராக உள்ளார்.
சம்விருதா, அகில்ராஜ் திருமணம் கண்ணூர் கன்டோன்மென்ட் பகுதியிலுள்ள வாஸ்வா கிளிப் ஹவுஸ் ஓட்டலில் இன்று நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி கொச்சியிலுள்ள லீ மெரிடியன் நட்சத்திர ஓட்டலில் வருகிற 6ம் தேதி நடைபெறுகிறது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மலையாள திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். திருமணத்திற்கு பின் நடிக்கப்போவதில்லை என கூறியுள்ள சம்விருதா கணவருடன் கலிபோர்னியாவில் குடியேற திட்டமிட்டுள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook