ஆந்திர அரசு ஊழியருக்கு 6 சதவீத டிஏ உயர்வு
ஐதராபாத்: ஆந்திர அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் இந்த டிஏ உயர்வு அமலுக்கு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அண்மையில் 7 சதவீத டிஏ உயர்வு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்த்தப்பட்டது. இந்நிலையில் ஆந்திர அரசும் தனது ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 35.9 சதவீத டிஏவை 41.9 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது.
ஜூலை 1 முதல் இந்த உயர்வு அமலுக்கு வருகிறது. புதிய டிஏ அடிப்படையில் அக்டோபர் மாத சம்பளம் வழங்கப்படும். ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்துக்குரிய டிஏ நிலுவை தொகை சேமநல நிதியில் சோக்கப்படும். இதன் வாயிலாக 10 லட்சம் ஊழியர்கள் மற்றும் 5.5 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பலன் பெறுவர். இந்த டிஏ உயர்வு காரணமாக அரசுக்கு ரூ. 1,100 கோடி கூடுதல் நிதி சுமை ஏற்படும்.