அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அதிகாரத்தின் மீது ஆசை : அன்னா ஹசாரே பேட்டி
புதுடெல்லி: சமூக சேவகர் அன்னா ஹசாரே குழுவில் இடம்பெற்று இருந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். ஊழலுக்கு எதிராக அன்னாவுடன் சேர்ந்து போராடிய அரவிந்த், கடந்த மாதம் அரசியல் கட்சி தொடங்கினார். இதையடுத்து இருவரும் பிரிந்தனர். கட்சிக்காக தனது பெயர், படத்தை பயன்படுத்த கூடாது என அன்னா கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவால், கட்சி தொடங்கியபோது அரசியல் தலைவர்களின் ஊழல்களை அம்பலப்படுத்துவேன் என்று கூறினார். அதன்படி காங்கிரஸ், பாஜ தலைவர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றசாட்டுகளை கூறி வருகிறார்.
இந்நிலையில், ‘அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பணத்தின் மீது ஆசை இல்லை. ஆனால் அதிகாரத்தின் மீது ஆசை இருக்கலாம்Õ என அன்னா ஹசாரே கூறியுள்ளார். தனியார் டிவி ஒன்றுக்கு பேட்டியளித்த அன்னா கூறுகையில், ‘Ôஅரவிந்த் கெஜ்ரிவால் தியாக மனப்பான்மை கொண்டவர். தனது குடும்பத்தை விட சமுதாயத்தை பற்றியே அதிகம் யோசிப்பவர். பணத்தின் மீது அவருக்கு ஆசை கிடையாதுÕÕ என்றார். அப்படியானால் அரவிந்த் கெஜ்ரிவால் அதிகாரத்துக்கு ஆசைப்படுகிறாரா என அவரிடம் கேட்கப்பட்டது. ‘Ôஅதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் அவருக்கு வேறெந்த பேராசையும் இல்லைÕÕ என்றார்.