Untitled Document
Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes
2012
26
Oct
ஹீரோ தயாரிக்காத படம்


நல்லகாலம் பொறக்குது... நல்லகாலம் பொறக்குது...

காட்டன் வீர இயக்கம் படத்தின் முதல் படத்திலிருந்து சினேகமானவர் பாட்டெழுதறாராம்... எழுதறாராம்... இந்த நெலல புதுசா இயக்கின படத்துல அறிவான கவிஞர் பாட்டு எழுதறாராம். இதால சினேக கவிக்கு தன்ன அடுத்த படத்துல பாட்டு எழுத அழைப்பாரோ மாட்டோரோன்னு இயக்கம் மேல டவுட் வந்துடுச்சாம். இத மறைமுகமா இயக்கத்துக்கிட்ட கவி சொன்னப்ப, ‘நா இன்டஸ்ரிக்கு வர்றதுக்கு வெத போட்டவரு அறிவுகவி. கொஞ்ச நாள் அவர் பாட்டு எழுதறத நிறுத்தி இருந்தாரு இப்ப எழுத ஆரம்பிச்சிட்டாரு. தொடர்ந்து என் படத்துல அவர் பாட்டு எழுதுவாறு. சினேக கவிக்கு திடீர்ன்னு ஏன் டவுட் வந்துச்சின்னு தெரியலே’னு பளிச்சினு பதில் சொல்லிட்டாராம்... சொல்லிட்டாராம்...

ச.ஒ. இருட்டறை படத்த பஞ்ச் நடிகர் தயாரிக்கறதா சொன்னாங்களாம்... சொன்னாங்களாம்... ஆனா அவர் தயாரிக்கலன்னு இப்ப சொல்றாங்களாம்.
பஞ்ச் நடிகரோட ஆரம்ப காலகட்டத்துல அவர் படங்களுக்கு பைனான்ஸ் பண்ணவரோட டாட்டர் இந்த படத்துல இயக்கமா அறிமுகமாகறாரு. ஆரம்பகாலத்து உதவிய மறக்காத பஞ்ச் நடிகரோட பாதர் தன்னோட படத்த ரீமேக் பண்றதுக்கு சம்மதிச்சாராம். அத்தோட அறிமுக இயக்க மதரோடு சேந்து படத்தை தயாரிக்கறாராம்... தயாரிக்கறாராம்...

மயிலு பேர்ல உருவான படம் 3 வருஷத்துக்கும் மேல கிடப்புல கெடந்ததாம்... கெடந்ததாம்... அதுக்கு தூசி தட்ட இப்பத்தான் நேரம் வந்திருக்காம். நடிச்சவெங்கெல்லாம் புதுமுகம்ன்றதால படத்துக்கு ஒரே பிளஸ்ஸா ஞானியின் இசையத்தான் நம்பி இருக்காங்களாம். சீக்கிரமே கவுதம இயக்கத்தோட ஞானி கைகோத்திருக்கற ‘நீ தானே கோல்டு..’ படம் ரிலீஸ் ஆக இருக்கறதால அதுக்கு முன்னோட்ட மயிலான படத்து  மூலமா ஞானியோட இசைய டிரையல் பாக்கற வாய்ப்பா இது இருக்கும்னு இன்டஸ்ரில பேசிக்கறாங்களாம்... பேசிக்கறாங்களாம்...

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana