ஹாலிவுட் ரிலீசுக்கு முன் தமிழில் வரும் படம்
சென்னை: வழக்கமாக ஹாலிவுட்டில் ரிலீஸ் ஆனபிறகோ அல்லது ஒரே நேரத்திலோ ஆங்கில படங்கள் இந்தியாவில் ரிலீஸ் ஆகும். ‘அட்வன்சர் இன் சீக்ரெட் வேர்ல்டுÕ என்ற படம் முதலில் இந்தியாவில் இம்மாதம் ரிலீஸ் ஆகிறது. அதன்பிறகே ஹாலிவுட்டில் ரிலீஸ் ஆகிறது. தமிழில் இதற்கு ‘ரகசிய தீவுÕ என்று பெயரிடப்பட்டுள்ளது. பல கோடி ஆண்டுகளுக்கு முன் அழியும் தருணத்தில் டைனோசர்களும், மனிதர்களும் வாழ்ந்த தீவு பற்றிய கதை.
சூர்யகாந்தி மணி என்ற விநோதமான ஒளிக்கற்றை அந்த கிராமத்தை காப்பாற்றி வருகிறது. அந்த ஒளி மங்கும்போது ஆபத்து சூழ்கிறது. கடலுக்கு அடியிலிருக்கும் மற்றொரு சூர்யகாந்தி மணியை இரண்டு இளைஞர்கள் கொண்டு வந்து எப்படி கிராமத்தை காக்கிறார்கள் என்பது கதை. இளைஞர்களாக காரல், டேவிட் நடித்துள்ளனர். மார்கோ பிரம்பில்லா இயக்கம். ஜி.கே.பிலிம்ஸ் வெளியீடு. தமிழில் ஏ.சீனிவாச மூர்த்தி வசனம் எழுதி உள்ளார்.