பிஇ, எம்பிஏ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் : எச்.ஜ.எல் நிறுவனத்தில் காலியிடங்கள்
டெல்லியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான Hindustan Insecticides Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பயிற்சி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர் களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
மி. பணி: மேனேஜ்மென்ட் டிரெய்னி: 11 இடங்கள். சம்பளம்: ரூ.20,000. வயது: 28க்குள்.
1. நிதி பிரிவு- 4 இடங்கள். தகுதி: பைனான்ஸ் பிரிவில் எம்பிஏ அல்லது சிஏ அல்லது ஐசிடபிள்யூஏ படிப்பின் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. மனிதவளத்துறை - 3 இடங்கள். தகுதி: Personnel Management/HR பிரிவுகளில் எம்பிஏ அல்லது எம்எஸ் டபிள்யூ அல்லது இண்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ் மற்றும் பர்சனல் மேனேஜ்மென்ட் அல்லது ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட் பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு.
3. கமர்ஷியல்: 4 இடங்கள். தகுதி: மெக்கானிக்கல் பிரிவில் பி.இ. அல்லது அறிவியல் பிரிவில் பட்டப்படிப்புடன் மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட் பிரிவில் முதுநிலை டிப்ளமோ அல்லது அதற்கு இணையான படிப்பு.
மிமி.பணி: கிராஜுவேட் இன்ஜினியர் டிரெய்னி: 14 இடங்கள். சம்பளம்: ரூ.20,000. வயது: 26க்குள்.
1. கெமிக்கல் இன்ஜினியரிங்: 7 இடங்கள். தகுதி: கெமிக்கல் இன்ஜினியரிங்கில் பி.இ.
2. மெக்கானிக்கல் இன்ஜினியரிங்: 3 இடங்கள். தகுதி: பி.இ.- மெக்கானிக்கல்
3.எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்: 2 இடங்கள். தகுதி: பி.இ. எலக்ட்ரிக்கல்
4. இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங்: 1 இடம்: தகுதி: பி.இ. இன்ஸ்ட்ருமென்டேஷன்
5. சிவில் இன்ஜினியரிங்: 1 இடம்: பி.இ. சிவில்.
விண்ணப்பதாரர்கள் குழு விவாதம், நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்ந் தெடுக்கப்படுவர். ஒரு வருட பயிற்சிக்கு பின்னர் அசிஸ்டென்ட் ஆபீசர் அல்லது அசிஸ்டென்ட் இன்ஜினியர் பணியில் அமர்த்தப்படுவர். அப்போது அவர்களுக்கு ரூ.16,400-40,500 வீதம் ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.500/-ஐ Hindustan Insecticides Limited என்ற பெயரில் புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் டிடியாக எடுக்க வேண்டும்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.hil.nic.in இணைய தளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.27.