மரத்தில் தொங்கும் பேய் கதை
சென்னை: மரத்தில் தொங்கி பழிவாங்கும் பேய் கதை ‘யாரதுÕ என்ற பெயரில் தயாராகிறது. இதுபற்றி இசை அமைத்து இயக்கும் ஏ.சம்பத்குமார் கூறியதாவது: பெரிய சமஸ்தானத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவரை நான்கு பேர் பலாத்காரம் செய்து கொலை செய்கின்றனர். அந்த பெண்ணின் உடலை காட்டில் புதைக்கிறார்கள். புதைக்கப்பட்ட பெண்ணின் ஆவி அங்குள்ள ஒரு மரத்தில் ஐக்கியமாகிறது.
அங்கிருந்தபடி கொலைகாரர்களை எப்படி பழி வாங்குகிறது என்பது கதை. வருண், உன்னி கிருஷ்ணன் ஹீரோக்கள். புதுமுகங்கள் சவுந்தர்யா, மீனா ஹீரோயின்கள். பொன்னம்பலம், காந்தராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். மகிபாலா ஒளிப்பதிவு. ஏ.சுந்தர்ராஜ் தயாரிப்பு. கேரளா, ஆந்திரா, அசாம், காஷ்மீர், குலு மணாலி, இமாச்சல பிரதேசம் மற்றும் சென்னை போன்ற இடங்களில் ஷூட்டிங் நடந்துள்ளது.