ராணுவத்தில் பல் டாக்டர் வேலை
ராணுவ மருத்துவ மனையில் பல் மருத்துவ பிரிவில் பணியாற்ற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த இடங்கள்: 36. தகுதி: 55 சதவீத மதிப் பெண்களுடன் பிடிஎஸ் அல்லது எம்டிஎஸ் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அக்.31க்கு முன் ஒரு வருட இன்டெர்ன்ஷிப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். அத்துடன் டெண்டல் கவுன்சில் ஆப் இந்தியாவின் பதிவு பெற்ற சான்றிதழையும் வைத்திருக்க வேண்டும்.
வயது: 31.12.2024 தேதி யின்படி 45க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.17,472 மற்றும் இதர படிகள்.
நேர்முகத் தேர்வு, மருத்துவ சோதனை அடிப்படையில் விண் ணப்பதாரர்கள் தேர்ந் தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங் களுக்கு www.indianarmy.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.31.