Untitled Document
Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes
2012
10
Oct
இளம்பெண்ணை காட்டுக்கு தூக்கி சென்று பலாத்காரம்


புழல்: செங்குன்றம் அருகே சோழவரம் அடுத்த பூதூரில் தனியார் சிமென்ட் கல் தயாரிக்கும் கம்பெனி உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் 20 குடும்பங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் இங்கு தங்கியிருந்து வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் இரவு சில வாலிபர்கள் கம்பெனிக்கு வந்தனர். குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த ரம்யா (17) என்ற பெண்ணை தூக்கிக் கொண்டு, அருகே உள்ள காட்டுக்கு சென்றனர். அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ரம்யாவின் அலறல் சத்தம் கேட்டு கம்பெனியில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் காட்டுக்கு ஓடி வந்தனர். இதை பார்த்ததும் பெண்ணை விட்டுவிட்டு வாலிபர்கள் ஓடிவிட்டனர். பதற்றத்தில் ஓடியபோது, அவர்களது செல்போன் அங்கேயே தவறி விழுந்துள்ளது. இதுபற்றி தகவல் கிடைத்த தும் சோழவரம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ரம்யாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர்கள் விட்டு சென்ற செல்போனில் உள்ள நம்பர்களுக்கு போலீசார் போன் செய்து விசாரித்தனர். பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது, புதூர் அடுத்த கிருதலாபுரம் கிராமத்தை சேர்ந்த கோடீஸ்வரன், தங்கராஜ், ஏழுமலை, மகேந்திரன் என தெரிந்தது. அவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக மேலும் சிலரை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana