| |||||
|
2011
15
Mar ![]() சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள டிடி மருத்துவக் கல்லூரியின் தலைவர் டிடி நாயுடு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருந்ததாவது: நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது. தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளுக்கு நுழைவுத்தேர்வை ரத்து செய்து சட்டம் இயற்றப்பட்டது. இதை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு நுழைவுத்தேர்வு ரத்து செய்தது செல்லும் என்று தீர்ப்பு கூறியது. இதன்பிறகும் மருத்துவக் கல்லூரிக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று மருத்துவ கவுன்சில் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. இது தீர்ப்புக்கு எதிரானது.எனவே, மருத்துவ கவுன்சில் உத்தரவை ரத்து செய்யவேண்டும். நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்ற உத்தரவுக்கு தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். நீதிபதி ஜோதிமணி இன்று இந்த வழக்கை விசாரித்தார். மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று மருத்துவ கவுன்சில் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும் சில
|
|