Untitled Document
2011
15
Mar
காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதி பட்டியல் கருணாநிதி வெளியிட்டார்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகள் விவரத்தை முதல்வர் கருணாநிதி இன்று அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.  உடன்பாட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கையெழுத்திட்டார். திமுக கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. திமுக 120 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமக 30, விடுதலை சிறுத்தைகள் 10, கொ.மு.க 7, முஸ்லிம் லீக் 2, பெருந்தலைவர் மக்கள் கட்சி, மூ.மு.க., ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் முஸ்லிம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, மூ.மு.க. ஆகிய கட்சிகள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி எண்ணிக்கை பங்கீடு முடிந்த பிறகு, தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டணி கட்சிகளின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்கள், ஸ்டாலின் தலைமையிலான திமுக குழுவுடன் தனித்தனியே பேச்சு நடத்தின. அதன் அடிப்படையில், போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகள் பட்டியலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக கூட்டணி தலைவருமான கருணாநிதி இன்று வெளியிட்டார். இதற்கான உடன்பாட்டில் தங்கபாலு கையெழுத்திட்டார். இதற்கிடையில் திமுக வேட்பாளர்களின் பட்டியலை நாளை மாலை 5 மணிக்கு முதல்வர் கருணாநிதி வெளியிடுகிறார். 18ம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. 19ம் தேதி மாலையில் திமுகவின் தேர்தல் அறிக்கையை முதல்வர் கருணாநிதி வெளியிடுகிறார்.

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு  ஒதுக்கப்பட்ட 63 தொகுதி பட்டியல்

1. ராயபுரம்
2. அண்ணா நகர்
3. தியாகராயநகர்
4. மயிலாப்பூர்
5. திரு.வி.க.நகர் (தனி)
6. பூவிருந்தவல்லி (தனி)
7. திருத்தணி
8. ஆவடி
9. ஆலந்தூர்
10. ஸ்ரீபெரும்புதூர் (தனி)
11. மதுராந்தகம் (தனி)
12. சோளிங்கர்
13. வேலூர்
14. ஆம்பூர்
15. கிருஷ்ணகிரி
16. ஒசூர்
17. செங்கம் (தனி)
18. கலசப்பாக்கம்
19. செய்யார்
20. ரிஷிவந்தியம்
21. ஆத்தூர் (தனி)(சேலம்)
22. சேலம் வடக்கு
23. திருச்செங்கோடு
24. ஈரோடு மேற்கு
25. மொடக்குறிச்சி
26. காங்கேயம்
27. உதகமண்டலம்
28. அவினாசி (தனி)
29. திருப்பூர் தெற்கு
30. தொண்டாமுத்தூர்
31. சிங்காநல்லூர்
32. வால்பாறை (தனி)
33. நிலக்கோட்டை (தனி)
34. வேடசந்தூர்
35. கரூர்
36. மணப்பாறை
37. முசிறி
38. அரியலூர்
39. விருத்தாசலம்
40. மயிலாடுதுறை
41. திருத்துறைப்பூண்டி (தனி)
42. பாபநாசம்
43. பட்டுக்கோட்டை
44. பேராவூரணி
45. திருமயம்
46. அறந்தாங்கி
47. காரைக்குடி
48. சிவகங்கை
49. மதுரை வடக்கு
50. மதுரை தெற்கு
51. திருப்பரங்குன்றம்
52. விருதுநகர்
53. பரமக்குடி (தனி)
54. ராமநாதபுரம்
55. விளாத்திகுளம்
56. ஸ்ரீவைகுண்டம்
57. வாசுதேவநல்லூர் (தனி)
58. கடையநல்லூர்
59. நாங்குநேரி
60. ராதாபுரம்
61. குளச்சல்
62. விளவங்கோடு
63. கிள்ளியூர்

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 




Follow Me