தமிழக அரசில் தொழிலாளர் நல அதிகாரி
தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் காலியாக உள்ள தொழிலாளர் நல அதிகாரி பணிக்கு நடத்தப்படும் டிஎன் பிஎஸ்சி தேர்வுக்கு தகுதியானவர் களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.
பணி: லேபர் ஆபீசர்: 5 இடங் கள். சம்பளம்: ரூ.15,600 39,100. வயது: 1.7.2025 தேதிப்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: ஏதேனும் ஒரு பட்டம். தொழிலாளர்கள் நலன்/ தொழிலாளர் சட்டம்/ சமூகவியல்/ தொழிலாளர் மேலாண்மை ஆகிய துறைகளில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருப்பது விரும்பத்தக்கது. எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந் தெடுக்கப்படுவர். சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும்.
தேர்வு மற்றும் விண்ணப்ப கட்டணம்: ரூ.175/ இதை போஸ்டல் ஆர்டராகவோ, இந்தியன் வங்கி கிளைகளில் பணமாகவோ செலுத்தலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.50ஐ செலுத்தவும்.
மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in இணையதளத்தை பார்க்கவும்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: நவ.10
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.8.