| |||||
|
2011
15
Mar ஐதராபாத்: ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 12ம் தேதி ‘ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார். இதுபற்றி நேற்று தெலுங்குதேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு கூறுகையில், ‘‘ஜெகனின் புதிய கட்சி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அல்ல, அது ஒய்எஸ்ஆர் ஊழல் காங்கிரஸ். சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் தொடங்கப்பட்ட கட்சி. அவரது கட்சியில் எந்த கொள்கையும் இல்லை. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு இல்லை. சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சி போல ஜெகனின் புதிய கட்சியும் மறைந்து போகும். காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இரண்டுமே ஊழல் கட்சிகள். இந்த 2 கட்சிகளுக்கும் எதிராக தெலுங்குதேசம் போராடும்’’ என்றார். நேற்று நெல்லூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் காகனி கோவர்தன் ரெட்டி, ஜெகனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் சில
|
|