Untitled Document
2011
15
Mar
பஹ்ரைனில் புரட்சி? ராணுவம் விரைந்தது


மனாமா: பஹ்ரைனின் மனாமா நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்களை கட்டுப்படுத்த ராணுவ வீரர்களை வளைகுடா நாடுகள் கவுன்சில் அனுப்பியுள்ளது. எகிப்து புரட்சி மத்திய கிழக்கு நாடுகளில் சலசலப்பை ஏற்படுத்தியது. பஹ்ரைனில் ஆட்சியாளர்களுக்கு எதிரா ஷியா பிரிவு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு படையினர் மூலம் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் பஹ்ரைனின் முக்கிய நகரான மனாமாவில் மக்கள் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர். பேர்ல் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.பஹ்ரைனில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்கு ராணுவ வீரர்களை வளைகுடா நாடுகள் கவுன்சில் (ஜி.சி.சி) நேற்று அனுப்பி வைத்தது. இந்த அமைப்பில் பஹ்ரைன், சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஐக்கிய அரசு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.  பஹ்ரைனில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள், மின் மையங்கள், வங்கிகள், மற்றும் தொழிற்சாலைகளை பாதுகாப்பு பணியில் இந்த வீரர்கள் ஈடுபடுத்தப்படுவர் என ஜி.சி.சி. தெரிவித்துள்ளது. இந்நிலையில் போராட்டம் நடத்தும் மக்களை ஒடுக்காமல், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி பஹ்ரைனுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 




Follow Me