அண்ணா நகர்: வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த டிராவல்ஸ் அதிபர் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. மதுரவாயலில் நேற்று நள்ளிரவில் நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரவாயல் எம்எம்டிஏ காலனி அபிராமி நகர் 5வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (30). டிராவல்ஸ் வைத்துள்ளார். நேற்றிரவு வீட்டின் முன்பு ரமேஷ் காரை நிறுத்தியிருந்தார். நள்ளிரவு 2 மணியளவில் காரில் இருந்து ஹாரன் சத்தம் கேட்டு ரமேஷ் திடுக்கிட்டு எழுந்தார். வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்த போது கார் எரிந்து கொண்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தார். இதில் காரின் இன்ஜின் பகுதி முழுவதும் எரிந்தது. இது குறித்து ரமேஷ் மதுரவாயல் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முன்விரோதத்தில் மர்ம நபர்கள் யாராவது காருக்கு தீ வைத்தார்களா அல்லது வேறு காரணமா என்று விசாரிக்கிறார்கள்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour">